அர்ஜுனா விருதுக்கு இரண்டு வீராங்கனை பெயர்களை பரிந்துரை செய்கிறது பிசிசிஐ

அர்ஜுனா விருதுக்கு இரண்டு வீராங்கனை பெயர்களை பரிந்துரை செய்கிறது பிசிசிஐ

மத்திய அரசு வழங்கும் விளையாட்டுத்துறைக்கான அர்ஜுனா விருதுக்கு இரண்டு வீராங்கனை பெயர்களை பரிந்துரை செய்கிறது பிசிசிஐ.

விளையாட்டுத்துறைகளில் சாதித்தவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. ஒவ்வொரு விளையாட்டின் சங்கத்திடமும் தகுதியான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெயர்களை அனுப்பி வைக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சங்கங்கள் பரிந்துரை செய்யும் வீரர்கள் தகுதியானவர்கள்தானா? என்பதை இதற்கான ஆய்வு கமிட்டி ஆராய்ந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும்.

இதனடிப்படையில் பிசிசிஐ ஷகா பாண்டே, தீப்தி ஷர்மா ஆகிய வீராங்கனைகளின் பெயர்களை பரிந்துரை செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவரும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேலும், சிறப்பாக விளையாடி வரும் இருவரும் கிரிக்கெட் செயல்பாட்டு குழுவால் ஈர்க்கப்பட்டதால் பரிந்துரை செய்ய இருக்கிறது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja