உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர்களுக்கான பரிசுத் தொகையை வழங்கியது பிசிசிஐ

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர்களுக்கான பரிசுத் தொகையை வழங்கியது பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் வாரியம் பத்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான பரிசுத் தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது.

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிசிசிஐ பரிசுத் தொகை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.

10 வீரர்களுக்கு கடந்த நான்கு மாதமாக பணம் வழங்கப்படவில்லை என்று செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து 8 வீரர்கள் தலா ரூ. 2.5 லட்சமும், இரண்டு வீராங்கனைகளுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாயையும் அவர்களது வங்கிக் கணக்கில் பிசிசிஐ செலுத்தியுள்ளது.

23 வயதிற்கு உட்பட்டோருக்கான சிகே நாயுடு டிராபியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய புதுச்சேரி அணியைச் சேர்ந்த சிதக் சிங், 16 வயதிற்கு உட்பட்டோருக்கான விஜய் மெர்சன்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த ஜார்கண்ட் அணி வீரர் ஆர்யன் ஹூடா, இதேத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய ஜார்கண்ட் அணி வீரர் அபிஷேக் யாதவ்.

குஜராத் அணியைச் சேர்ந்த மனன் ஹிங்ராஜியா, அபுர்வா ஆனந்த், கேரளாவைச் சேர்ந்த வத்சல் கோவிந்த், சிக்கிம் அணியைச் சேர்ந்த மிலிந்த் குமார், பீகார் அணியைச் சேர்ந்த அஷுடோஷ் அமன் ஆகியோருக்கு தலா 2.5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

வீராங்கனைகளான ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா ஆகியோருக்கு தலா 1.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

லாக்டவுன் நேரமான தற்போது அவர்களது குடும்பம் பணத்திற்காக கஷ்டப்படுகின்றன என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. அதனடிப்படையில் பிசிசிஐ நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja