வீட்டில் நான் கண்ட டைனோசரை நீங்களும் பாருங்கள்: அனுஷ்கா ஷர்மா வெளியிட்ட காணொளி

வீட்டில் நான் கண்ட டைனோசரை நீங்களும் பாருங்கள்: அனுஷ்கா ஷர்மா வெளியிட்ட காணொளி

விராட் கோலி வீட்டில் டைனோசர் போன்று நடந்த வீடியோவை அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

நாடும் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதில் திரைத்துறை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் ஊரடங்கு காலத்தில் தாங்கள் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள், தங்களது அன்றாட நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் விராட் கோலி – அனுஷ்கா ஜோடியும் சமூக வலைதளங்களில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அதன்படி நேற்று விராட் கோலி டைனோசராக நடித்துக் காட்டிய வீடியோவை அனுஷ்கா பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் டைனோசர் போல நடந்து வரும் கோலி கடைசியில் அதேபோல ஒலி எழுப்பி செல்கிறார். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து இது க்யூட்டான டைனோசர் என பதிவிட்டு வருகின்றனர்.

I spotted …. A Dinosaur on the loose 🦖🦖🦖🤪🤪🤪 pic.twitter.com/mrYkICDApw

— Anushka Sharma (@AnushkaSharma)

May 20, 2020

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja