ஜூலை 8-ல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான சோதனை தொடர் தொடக்கம்: இங்கிலாந்து அறிவிப்பு

ஜூலை 8-ல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான சோதனை தொடர் தொடக்கம்: இங்கிலாந்து அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடர் ஜூலை 8-ந்தேதி தொடங்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் தற்போது கொரோனா தொற்று குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இங்கிலாந்து அரசு அனுமதி அளித்தது.

வெஸ்ட் இண்டீஸ் கிரக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருந்தது. கொரோனாவால் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது இந்தத் தொடரை நடத்த இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் முயற்சிகள் மேற்கொண்டன. வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து செல்ல வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு அனுமதி அளித்தது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஜூன் 8-ந்தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. ஜூலை 28-ந்தேதி தொடர் முடிவடைகிறது.

போட்டிகள் அனைத்தும் ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்திற்குள் நடக்கிறது. ஜூலை 8-ந்தேதி இங்கிலாந்தில் கிரிக்கெட் தொடங்கப்பட்டால் கொரோனா பாதிப்பிற்குப்பின் தொடங்கும் முதல் கிரிக்கெட் போட்டி இதுவாகத்தான் இருக்கும்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja