சொந்த மண்ணில் அஸ்வினை விட சிறந்த பந்து வீச்சாளர் கிடையாது: சக்லைன் முஷ்டாக் சொல்கிறார்

சொந்த மண்ணில் அஸ்வினை விட சிறந்த பந்து வீச்சாளர் கிடையாது: சக்லைன் முஷ்டாக் சொல்கிறார்

சொந்த மண்ணில் விளையாடும்போது அஸ்வினை விட சிறந்த பந்து வீச்சாளர் யாரும் இல்லை என பாகிஸ்தான் முன்னான் வீரர் சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக். தற்போது பாகிஸ்தான் சர்வதேச வீரர்கள் முன்னேற்றத்திற்கான தலைவராக உள்ளார்.

தற்போதுள்ள சுழற்பந்து வீச்சாளர்களில் நாதன் லயன், அஸ்வின் ஆகியோரை பற்றி குறிப்பிட்டுள்ளார். சொந்த மண்ணில் விளையாடும்போது அஸ்வினை விட சிறந்த பந்து வீச்சாளர் யாரும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சக்லைன் முஷ்டாக் கூறுகையில் ‘‘அஸ்வின் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளில் அசத்தி வருகிறார். வெளிநாட்டு மண்ணிலும் சிறப்பாக செயல்படுகிறார். ஆனால், சொந்த மண்ணில் அவரை விட சிறந்த பந்து வீச்சாளர்கள் இருக்க முடியாது. ஜடேஜாவும் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

நாதன் லயன் ஆஸ்திரேலிய அணிக்காக மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடியுள்ளார். அவருடைய பந்து வீச்சு மற்றும் ஸ்டிரைக் ரேட்டை வைத்து பார்க்கும்போது தற்போதுள்ள நிலையில் அவர்தான் சிறந்த பந்து வீச்சாளர்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja