யுவென்டஸ் அணியை வீழ்த்தி இத்தாலி கோப்பையை வென்றது நபோலி

யுவென்டஸ் அணியை வீழ்த்தி இத்தாலி கோப்பையை வென்றது நபோலி

இத்தாலி கோப்பைக்கான இறுதிப் போட்டியில் யுவென்டஸ் அணியை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது நபோலி.

இத்தாலி கோப்பைக்கான கால்பந்து இறுதி போட்டி ரோமில் உள்ள ஒலிம்ப்கோ மைதானத்தில் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது. இதில் முன்னணி அணிகளாக யுவென்டஸ் – நபோலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி சூட் கடைபிடிக்கப்பட்டது. இதில் நபோலி 4-2 என யுவனெடஸ் அணியை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

யுவென்டஸ் அணியின் முன்னணி வீரர்களான பவுலோ டைபாலா, டேனிலோ ஆகியொர் பெனால்டி வாய்ப்பை தவறவிட்டனர்.

கொரோனா பாதிப்புக்குப்பின் போட்டிகள் தொடங்கியதால் வீரர்கள் காயத்தை குறைக்கும் வகையில் கூடுதல் நேரம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja