ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் அதிக மட்டையிலக்கு வீழ்த்திய ரஜிந்தர் கோயல் காலமானார்

ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் அதிக மட்டையிலக்கு வீழ்த்திய ரஜிந்தர் கோயல் காலமானார்

இந்தியாவின் உள்ளூர் முதல்-தர கிரிக்கெட்டான ரஞ்சி டிராபியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ரஜிந்தர் கோயல் காலமானார்.

ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ரஜிந்தர் கோயல். 77 வயதாக இவர் நேற்று காலமானார். நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் நேற்று உயிர் பிரிந்தது. இவருக்கு மனைவியும், நிதின் கோயல் என்ற மகனும் உள்ளனர். நிதின் கோயலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இடது கை சுழற்பந்து வீச்சாளரான ரஜிந்தர் கோயலுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காவிட்டாலும், ரஞ்சி டிராபியில் 637 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

1974-75-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் இடம்பிடித்திருந்தார். ஆனால் இந்திய அணியில் ஏற்கனவே முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்ததால் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.

பாட்டியாலா, தெற்கு பஞ்சாப், டெல்லி, ஹரியானா அணிகளுக்காக 44 வயது வரை விளையாடி 750-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja