‘நாடு, கிரிக்கெட்’ நலனை கருத்தில் கொண்டு ஐபிஎல் குறித்து பிசிசிஐ முடிவு எடுக்கும்: ராஜீவ் சுக்லா

‘நாடு, கிரிக்கெட்’ நலனை கருத்தில் கொண்டு ஐபிஎல் குறித்து பிசிசிஐ முடிவு எடுக்கும்: ராஜீவ் சுக்லா

ஐபிஎல் 2020 சீசன் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் சரியான முடிவு எடுக்கும் என்று ஐபிஎல் முன்னாள் தலைவர் ராஜீவ் சுக்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 சீசன் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் – நவம்பரில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால் பிசிசிஐ ஐபிஎல் 2020 தொடரை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நாட்டின் நலம், கிரிக்கெட்டின் நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பிசிசிஐ நல்ல முடிவு எடுக்கும் என ஐபிஎல் முன்னாள் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜீவ் சுக்லா கூறுகையில் ‘‘ஐபிஎல்-ஐ பொறுத்தவரைக்கும் பிசிசிஐ அதன்பின் கவனம் செலுத்தி வருகிறார்கள். அதனால் சரியான முடிவு எடுப்பார்கள். நாம் நமது நாட்டின் நலனை பார்க்க வேண்டும். இருந்தாலும் நாடு மற்றும் கிரிக்கெட் ஆகியவற்றின் நலனையும் பார்க்க வேண்டும்.

அதனால் சரியான முறையில் கவனமாக அடியெடுத்து வைப்பார்கள். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. எல்லாவற்றையும் மனதில் வைத்து சிறந்த முடிவை எடுக்க வேண்டும். முடிவு எடுப்பதற்கு முன் நான் எந்த கருத்தையும் கூறக் கூடாது’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja