ஆஷஸ்-க்கு இணையான இந்தியா – பாகிஸ்தான் தொடர் மீண்டும் நடக்க வேண்டும்: சோயிப் மாலிக்

ஆஷஸ்-க்கு இணையான இந்தியா – பாகிஸ்தான் தொடர் மீண்டும் நடக்க வேண்டும்: சோயிப் மாலிக்

ஆஷஸ் தொடருக்கு இணையான இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இருநாட்டு தொடர் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஷஸ் என்று அழைக்கப்படுகிறது. இது கிரிக்கெட் டெஸ்டில் பாரம்பரியமிக்க தொடராகும். இதற்கு இணையான தொடராக இந்தியா – பாகிஸ்தான் இடையிலான தொடர் பார்க்கப்படுகிறது.

ஆனால், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக இருநாட்டு தொடரில் விளையாட மறுத்து வருகிறது.

இந்நிலையில் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான தொடர் நடத்தப்பட வேண்டும் என்று சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சோயிப் மாலிக் கூறுகையில் ‘‘ஆஷஸ் உலக கிரிக்கெட்டுக்கு தேவை என்ற போதிலும், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இருநாட்டு தொடர் மீண்டும் தொடங்குவது உலகிற்கு மிகவும் தேவை என்று நினைக்கிறேன்.

ஆஷஸ் தொடர் இன்றி இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரை நினைத்து பார்க்க முடியுமா?. இரண்டு தொடரும் ஒரு மாதிரியான பேரார்வம் மற்றும் சிறந்த வரலாற்றுடன் விளையாடப்படுவது. அதனால் தற்போது நாம் விளையாடாமல் இருப்பது அவமானம்.

இந்திய கிரிக்கெட் வீரர்களை மரியாதையுடன் பேசும் நண்பர்கள் எனக்கு உண்டு. அதேபோல் இந்தியாவில் விளையாடும்போது எனக்கும், பாகிஸ்தான் வீரர்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர். அதனால் இந்த நட்பை மீண்டும் பார்க்க விரும்புகிறேன்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja