செர்ரி ஏ லீக்: ரொனால்டோ, டைபாலா கோலால் யுவென்டஸ் அணி வெற்றி

செர்ரி ஏ லீக்: ரொனால்டோ, டைபாலா கோலால் யுவென்டஸ் அணி வெற்றி

இத்தாலி கோப்பையில் தோல்வியடைந்த நிலையில், செர்ரி ஏ லீக்கில் பொலோக்னா அணியை 2-0 என யுவென்டஸ் வீழ்த்தியது.

இத்தாலி கோப்பை இறுதிப் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் யுவென்டஸ் – நபோலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கிறிஸ்டியானோ ரொனால்டோ, டைபாலோ போன்ற முன்னணி வீரர்கள் விளையாடிய போதிலும் யுவென்டஸ் அணியால் ஆட்டம் முடியும் வரை கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டி டிராவில் முடிந்தது. கோரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக கூடுதல் நேரம் வழங்கப்படவில்லை.

நாக்-அவுட் போட்டி என்பதால் பெனால்டி சூட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் நபோலி 4-2 என வெற்றி பெற்றது. டைபாலா பெனால்டி வாய்ப்பை தவறவிட்டார்.

இந்நிலையில் இத்தாலியின் முதன்மை லீக்கான செர்ரி ஏ-யில் நேற்று பொலோக்னா அணியை யுவென்டஸ் எதிர்கொண்டது. கிறிஸ்டியானோ ரொனால்டோ, டைபாலா ஆகியோர் தலா ஒரு கோல் அடிக்க யுவென்டஸ் 2-0 என வெற்றி பெற்றது.

கடந்த 8-ந்தேதி நடைபெற்ற இன்டர் மிலன் அணிக்கெதிரான ஆட்டத்திலும் 2-0 என வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. நேற்றைய வெற்றி மூலம் நான்கு புள்ளிகள் வித்தியாசத்துடன் முதல் இடத்தில் உள்ளது. லஜியோ அணி 2-வது இடத்தில் உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja