இங்கிலாந்து அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார் ஜாப்ரா ஆர்சர்

இங்கிலாந்து அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார் ஜாப்ரா ஆர்சர்

குடும்ப உறுப்பினர் ஒருவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால், இங்கிலாந்து அணியுடன் தாமதமாக இணைந்த ஜாப்ரா ஆர்சர் பயிற்சியை மேற்கொண்டார்.

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிறது 8-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த 9-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது.

14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அதேவேளையில் பயிற்சிக்காக 30 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.

அவர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன்பின் ஒன்றிணைந்து பயிற்சியை மேற்கொள்ள இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு திட்டமிட்டிருந்தது.

அதன்படி நேற்று பயிற்சியை தொடங்கினார்கள். இதற்கிடையே ஜாஃப்ரா ஆர்சரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால் ஆர்சர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை காரணமாக ஜாப்ரா ஆர்சருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டது. அதில் நெகட்டிவ் வர அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja