ஐபிஎல் திருவிழா போன்று இருந்தது: நினைவு கூர்ந்த பாகிஸ்தான் வீரர்

ஐபிஎல் திருவிழா போன்று இருந்தது: நினைவு கூர்ந்த பாகிஸ்தான் வீரர்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திருவிழா போன்று இருந்தது என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உமல் குல் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் முதன்முதலாக 2008-ம் ஆண்டு ஐபிஎல் டி20 லீக்கை தொடங்கியது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி வீரர்களும் கலந்து கொண்டனர். பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக விளையாடி இந்திய ரசிகர்களின் ஆதரவை பெற்றனர்.

2007-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சளார் உமர் குல்லை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது. கங்குலியின் தலைமையின் கீழ் அவர் விளையாடினார்.

2008 தொடரை நினைவு கூர்ந்த உமல் குல், ஐபிஎல் திருவிழா போன்று இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உமர் குல் கூறுகையில் ‘‘முதல் முறையாக தனியார் லீக் தொடங்கப்பட்டதால் நாங்கள் மிகவும் ரசித்தோம். 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியது. ஐபிஎல் ஏலம் எடுக்கப்பட்டது. வங்காள தேசத்திற்கு எதிராக சொந்த மண்ணில்  விளையாடியது, பிரெண்டன் மெக்கல்லம் முதல் போட்டியிலேயே 150 ரன்கள் விளாசியது என பல ஞாபங்கள் உள்ளன.

நாங்கள் இந்தியாவுக்கு சென்றபோது, பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் இருந்தனர். ஐபிஎல் முற்றிலும் மாறுவிட்ட விஷயம். அது திருவிழா போன்று இருந்தது.

போட்டி நடைபெற்ற பின், ஓட்லில் போட்டி குறித்த நிகழ்ச்சி நடைபெறும். குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஷாருக் கான் உரிமையாளர் என்பதால் அவர் இருப்பார். தோல்வியடைந்தாலும், வெற்றி பெற்றாலும் ஸ்பான்சர், பிராண்ட் உடன் போட்டோ எடுத்துக் கொள்வோம். பார்ட்டியும் நடைபெறும். இது மிகவும் சிறப்பாக அனுபவம்.

நான் இளம் வீரர் என்பதால் ரிக்கி பாண்டிங் போன்ற தலைசிறந்த வீரர்களிடம் இருந்து ஏராளமான விஷயங்கள் கற்றுக்கொண்டேன். கிரிக்கெட் ஜாம்பவான்கள் அவர்களுடைய வாழ்க்கையை எப்படி செலவிடுகிறார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது’’ என்றார்.

2008-க்குப்பிற எல்லைப் பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படவில்லை.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja