ஸ்லெட்ஜிங்கை விட மிகவும் மோசமானது: அம்ப்ரோஸ் குறித்து ஸ்டீவ் வாக் சொல்கிறார்

ஸ்லெட்ஜிங்கை விட மிகவும் மோசமானது: அம்ப்ரோஸ் குறித்து ஸ்டீவ் வாக் சொல்கிறார்

வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சு ஜா்மபவான் அம்ப்ரோஸ் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடமாட்டார். ஆனால், அவரது ஆக்ரோஷம் அதைவிட கொடுமையானது என ஸ்டீவ் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 1980-ல் இருந்து 1995-ம் ஆண்டு வரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடரை இழக்காமல் வீறுநடை போட்டுக் கொண்டிருந்தது. விவியன் ரிச்சர்ட்ஸ், அம்ப்ரோஸ், மால்கம் பார்சல் போன்ற ஜாம்பவான்கள் அணியில் இருந்தனர்.

1995-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது 2-1 என ஆஸ்திரேலியா வெற்றிபெற்று வெஸ்ட் இண்டீஸ் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்த தொடரின் ஜமைக்கா போட்டியில் ஸ்டீவ் வாக் இரட்டை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த போட்டியில் மார்க் வாக்கும் சதம் அடித்தார்.

இந்தத் தொடரில் தனக்கும் அம்ப்ரோஸ்க்கும் இடையில் நடைபெற்ற கடுமையான மோதல் குறித்து ஸ்டீவ் வாக் நினைவு கூர்ந்துள்ளார்.

அம்ப்ரோஸ் குறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில் ‘‘கர்ட்லி அம்ப்ரோஸ் சிறந்த பந்து வீச்சாளர். அவர் நம்பமுடியாத வகையிலான எதிரி. ஆனால் நான் மிகவும் மரியாதை கொடுக்கும் எதிரணி பந்து வீச்சாளர். அவர் ஒருபோதும் உங்களிடம் ஏதும் சொல்லமாட்டார். இது ஸ்லெட்ஜிங்கை விட மிகவும் மோசமானது. அவர் உங்களை அவுட்டாக்க நினைக்கிறாரா, உங்களை காயப்படுத்த முயற்சி செய்ய நினைக்கிறாரா என்பதை உங்களால் தெரிந்து கொள்ள முடியாது.

அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை சிலர் சொல்வதைவிட இது மோசமானது. அவர் சரியான லெந்தில் பந்தை வீசுவதுடன், கழுத்தை குறிவைத்து ஷார்ட் பந்துகளையும் வீசக் கூடியவர். அவர் அற்புதமான போட்டியாளர்.’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja