தல டோனியின் 39-வது பிறந்த நாள்: உலங்கூர்தி கொண்டாட்டத்தில் உங்கள் நடனம் இடம்பெற வேண்டுமா?

தல டோனியின் 39-வது பிறந்த நாள்: உலங்கூர்தி கொண்டாட்டத்தில் உங்கள் நடனம் இடம்பெற வேண்டுமா?

தல டோனியின் 39-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் வெயின் பிராவோ பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்.

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக இருந்தவர் எம்எஸ் டோனி. இவர் 2008-ல் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இல்லை என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லை என்று கூட சொல்லலாம். டி20 லீக்கை பிரபலப்படுத்த மிகப்பெரிய தூதுவராக இருந்தார் என்றால் அது மிகையாகாது.

இவர் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் கிடைத்தனர். இவரை ரசிகர்கள் தல  என்றே அழைப்பார்கள்.

ஜூலை 7-ந்தேதி தல டோனியின் 39-வது பிறந்த நாளாகும். பிறந்த நாளை வெயின் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்.

டோனியின் டி-சர்ட் நம்பர் 7, முதல் முறையாக 2007-ல் டி20 உலக கோப்பையை இந்தியாவுக்கு வாங்கிக் கொடுத்தார். ஐசிசி-யின் மூன்று டிராபிகளையும் வென்ற ஒரே கேப்டன் இவர்தான். இதை வைத்து ஒரு பாடல் உருவாக்கியுள்ளார்.

இந்த பாடலின் டீசரை வெளியிட்ட பிராவோ, ‘‘நாங்கள் ஜூலை 7-க்கு தயாராகி கொண்டிருக்கிறோம். சாம்பியன் அணியுடன் சிறந்த டிராக்கோடு அவரது பிறந்த நாளை  கொண்ட சென்று கொண்டிருக்கிறோம். @djanamusic @ultrasimmo @collegeboyjesse @arielle.alexa @dexterrthomas இதற்கு டேக் செய்ய மறந்து விடாதீர்கள். உங்களது ஹெலிகாப்டர் ஆட்டத்தை காண்போம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

இதை வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ்  தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டு ‘‘ஹெலிப்பாடர் வாய்ப்பு. உங்களது வீடியோவை @DJBravo47 -க்கு அனுப்புங்கள்’’ எனப் பதிவிட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja