முதல் 45 நிமிடத்தை தாண்டிவிட்டால் ஹிட்மேனிடம் டபுள் செஞ்சூரியை எதிர்பார்க்கலாம்: வாசிம் ஜாபர்

முதல் 45 நிமிடத்தை தாண்டிவிட்டால் ஹிட்மேனிடம் டபுள் செஞ்சூரியை எதிர்பார்க்கலாம்: வாசிம் ஜாபர்

வெளிநாட்டு மண்ணில் முதல் 45 நிமிடங்கள் ரோகித் சர்மாவுக்கு கடினமானதாக இருக்கும், அதன்பின் அவரால் டபுள் செஞ்சூரி கூட அடிக்க முடியும் என வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஒயிட்-பால் அணி தொடக்க பேட்ஸ்மேனும், துணைக் கேப்டனுமான ரோகித் சர்மா கடந்த இரண்டு வருடமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக இங்கிலாந்து உலக கோப்பையில் ஐந்து சதங்கள் விளாசினார். இதனால் டெஸ்ட் போட்டியிலும் தொடக்க வீரராக களம் இறக்கப்படுகிறார்.

இந்தியாவில் நடைபெற்ற தொடரில் சிறப்பாக விளையாடினார். நியூசிலாந்து தொடரின்போது காயம் ஏற்பட்டதால் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த வருடம் இறுதியில் இந்திய டெஸ்ட் அணி ஆஸ்திரேலியா செல்கிறது. அப்போது தொடக்க வீரராக களம் இறங்க இருக்கிறார்.

புதுப்பந்தில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ‘‘ஆட்டம் தொடங்கிய 30 முதல் 45 நிமிடங்கள் வரை அவருக்கு சற்று கடினமானதாக இருக்கும். அதை ரோகித் சர்மா சமாளித்து விட்டால் டபுள் செஞ்சூரி கூட அடிக்கும் திறமை அவரிடம் உள்ளது’’ என்று வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘‘தற்போது அவரது ஆட்டத்தை முன்பைவிட தற்போது சிறப்பாக புரிந்து கொண்டுள்ளார். தற்போது உள்ள ரோகித் சர்மா இதற்கு முன் நாம் பார்த்தவர் கிடையாது. எங்கு அமைதியாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் கூட உலக கோப்பையில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால், பந்து லேசாக மூவ் ஆகும்போது, பின்னால் வந்து பந்தை தடுத்து ஆடினார். தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தானுக்கு எதிராக 8 முதல் 10 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து நின்று அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கண்டிசனை அவர் புரிந்து கொண்ட பின்னர் சிறந்த வீரராவார். அதன்பின் உடனடியாக ஸ்டிரைக் ரேட்டை 130 வரை உயர்த்தி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உள்ளது’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja