கைலியன் மப்பேவுக்கு காயம்: அடிதடியில் இறங்கிய பிஎஸ்ஜி வீரர்கள்

கைலியன் மப்பேவுக்கு காயம்: அடிதடியில் இறங்கிய பிஎஸ்ஜி வீரர்கள்

பிரெஞ்ச் கோப்பை இறுதிப்போட்டியில் கைலியன் மப்பேவை கீழே தள்ளிவிட்ட எதிரணியை பி.எஸ்.ஜி. வீரர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரான்சில், கிளப் அணிகளுக்கான பிரெஞ்ச் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வந்தது. கொரோனா பாதிப்பால் 4 மாதங்களாக தடைப்பட்டிருந்த இந்த போட்டியின் இறுதி சுற்றில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.)- செயின்ட் எடின்னே அணிகள் நேற்று முன்தினம் இரவு மோதின.

5 ஆயிரத்திற்கும் குறைவான ரசிகர்கள் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். விறுவிறுப்பான இந்த மோதலில் பி.எஸ்.ஜி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் எடின்னேவை தோற்கடித்து 13-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. பி.எஸ்.ஜி. அணியில் நட்சத்திர வீரர் நெய்மார் 14-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

எடின்னே கேப்டன் லோக் பெரின் 31-வது நிமிடத்தில் எதிரணி வீரர் கைலியன் மப்பேவின் காலை முட்டியால் மிதித்து இடறி விட்டதால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் வலது கணுக்காலில் வலியால் துடித்த கைலியன் பாப்பே கண்ணீர் மல்க பாதியிலேயே நடையை கட்டினார்.

இதனால் கோபம் அடைந்த பி.எஸ்.ஜி. அணி வீரர்கள் எடின்னே வீரர்களை தாக்க ஆரம்பித்தனர். அதே நேரத்தில் எடின்னே வீரர்களும் பதிலுக்கு தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நடுவர்கள் தலையிட்டு சமாதானம் படுத்தினர்.

இந்த சீசனில் மொத்தம் 29 கோல்கள் அடித்தவரான மப்பே அடுத்த மாதம் நடக்கும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்இறுதி ஆட்டத்தில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.

Very difficult to maintain social distancing when you are fighting. Ligue 1 was cancelled due to #Covid_19 and now this fight after horrible tackle with #Mbappe#PSGASSEpic.twitter.com/TFlcGQSKij

— Indian Chaplin (@ventdeInde)

July 25, 2020

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja