Press "Enter" to skip to content

ஆக்சிஜன் அளவு குறைந்ததால் அவசரமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஹாக்கி வீரர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஹாக்கி வீரர் மன்தீப் சிங் அவசரமாக மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து விளையாட்டு போட்டிகள் இந்தியாவில் இதுவரை நடைபெறாமல் உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து பயிற்சி முகாம் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் இந்திய ஹாக்கி வீரர்களுக்கு வருகிற 20-ந்தேதியிலிருந்து பெங்களூருவில் பயிறசி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஹாக்கி வீரர்கள் பெங்களூரு சென்றுள்ளனர். அவர்களுக்கு அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மன்தீப் சிங், கேப்டன் மன்ப்ரீத் சிங், சுரேந்தர் குமார், ஜாஸ்கரன் சிங், வருண் குமார், கோல் கீப்பர் கிருஷ்ணன் பகதுர் பதாக் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களுக்கு இந்திய விளையாட்டு அணையத்தின் வளாகத்தில் சகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மன்தீப் சிங்கிற்கு நேற்றிரவு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளது. ஆக்சிஜன் அளவு குறைந்தால் முதல் கட்ட அளவில் இருந்து நோய் அடுத்தக்கட்டத்திற்கு செல்வதாக பொருள். இதனால் உடனடியாக எஸ்.எஸ். ஸ்ப்ராஷ் மல்டிஸ்பெசாலிட்டி மருத்துவமனை்ககு முன்னெச்சரிக்கை காரணமாக மாற்றப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 வயதாகும் மன்தீப் சிங் 129 போட்டிகளில் விளையாடி 60 கோல்கள் அடித்துள்ளார். 2018-ம் ஆண்டு இந்திய அணி ஆசியசாம்பியன்ஸ் டிராபியை வெல்லும்போது அணியில் ஒரு நபராக இருந்தார் என்பது குறி்ப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »