Press "Enter" to skip to content

மாஸ்க் அணியாதது குறித்து கேட்ட போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜடேஜா மனைவி

ஜடேஜா மாஸ்க் அணிந்திருந்த நிலையில், அவரது மனைவி மாஸ்க் அணியாதது குறித்து கேள்வி கேட்ட போலீசாரிடம், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

கொரோனாவில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகிய இரண்டையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சில மாநில அரசுகள் முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும் எனத் அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஜடேஜா தனது மனைவியுடன் குஜாராத் மாநிலம் ராஜ்கோட் கிஸன்பாரா சவுக் பகுதியில் சென்றுள்ளார்.

அப்போது பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் ஜடேஜா சென்ற காரை மறித்துள்ளனர். அப்போது ஜடேஜா முகக்கவசம் அணிந்திருக்கிறார். ஆனால், அவரது மனைவி ரிவாபா முகக்கவசம் அணியவில்லை. இதுகுறித்து பெண் போலீஸ் கோசை என்பவர் ஏன் முகக்கவசம் அணியவில்லை என்று கேட்டுள்ளார்.

இதனால் ஜடேஜா மனைவி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் மேல் அதிகாரிகள் வரை சென்றுள்ளது. அவர்கள் விசாரணை நடத்தியதில் ஜடேஜா மனைவிக்கும், போலீசார்களுக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெற்ற வாக்குவாதம் முற்றியதால் பெரிதாக்கப்பட்டுள்ளது என்று துணை கமிஷனர் மனோகர்சின் ஜடேஜா தெரிவித்தார்.

இதற்கிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் போலீஸ் கோசை அசௌகரியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அரைமணி நேரம் கழித்து டிஜ்சார்ஜ் செயயப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து எப்.ஐ.ஆர். ஏதும் பதிவு செய்யவில்லை.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »