டி20 கிரிக்கெட் லீக் அணியின் உரிமையாளருக்கு வந்த விபரீத ஆசை: இறுதியில்…

டி20 கிரிக்கெட் லீக் அணியின் உரிமையாளருக்கு வந்த விபரீத ஆசை: இறுதியில்…

ஆப்கானிஸ்தானில் டி20 லீக் அணியின் உரிமையாளர் ஆடும் லெவன் அணியில் களம் இறங்கி விளையாடியதால் தடையை சந்தித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஷ்பாகீஜா என்ற டி20 லீக் கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இதில் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் காபுல் ஈகிள்ஸ் அணியின் உரிமையாளராக அப்துல் ரத்தீப் அயூபி உள்ளார். 40 வயதான இவர் மிதமான வேகப்பந்து வீச்சாளர்.

இந்தத் தொடருக்கான காபுல் ஈகிள்ஸ் அணியில் வீரர்கள் பட்டியலில் இவர் இடம் பெறவில்லை. என்றாலும், ஸ்பீன் தேர் டைகர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாட விரும்பினார். இதனால் 11 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்து ஒரு ஓவர் வீசினார் 16 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து மட்டையிலக்கு ஏதும் வீழ்த்தவில்லை.

என்றாலும், 142 ரன்களை சேஸிங் செய்து காபுல் ஈகிள்ஸ் அணி வெற்றி பெற்றது. அணி உரிமையாளர் வீரர்கள் பட்டியலில் இடம்பெறாத நிலையில், அணியில் சேர்ந்து விளையாடியதால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு அவருக்கு தடைவிதித்துள்ளது. இதனால் மீதமுள்ள போட்டிகளின்போது காபுல் ஈகிள்ஸ் அணியுடன் இவர் செல்ல முடியாது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja