மும்பை இந்தியன்ஸ் அணியில் இவர்தான் மிகவும் அபாயகரமான வீரர்: ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை

மும்பை இந்தியன்ஸ் அணியில் இவர்தான் மிகவும் அபாயகரமான வீரர்: ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை

மும்பை இந்தியன்ஸ் அணியில் அபாயகரமான வீரர் யார் என்பதை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் விவரித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில ஐபிஎல் 2020 பருவம் தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ரசிகர்களிடம் ஐபிஎல் ஜூரம் தொற்றிக் கொண்டது. எங்கு பார்த்தாலும் ஐபிஎல் பேச்சுதான். ரசிகர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு அணி வீரர்களும், அணி ஸ்டாஃப்களும் அதைப்பற்றிதான் பேசுகிறார்கள்.

இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், மும்பை இந்தியன்ஸ் அணியின் அபாயகரமான வீரர் யார் என்பதை விவரித்துள்ளார்.

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவை விட அபாயகரமான வீரராக மற்ற யாரும் இருக்க முடியாது’’ என்றார். ஐபிஎல் தொடரில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இருக்கும் ரோகித் சர்மா, ஐந்து முறை சாம்பியன் கோப்பையை முத்தமிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

2009-ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடும்போது அந்த அணி கோப்பையை வென்றது. அதன்பின் நான்கு முறை மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வருகிறார். 188 போட்டிகளில் 4898 ஓட்டங்கள் அடித்துள்ளார். 36 அரைசதங்கள் அதில் அடங்கும்.

2014-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடக்கும்போது மும்பை இந்தியன்ஸ் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja