சிஎஸ்கே சிறந்த ஐபிஎல் அணி: அவர்களிடம் இருந்து எதையும் எளிதாக பெற்றுவிட முடியாது- ரோகித் சர்மா

சிஎஸ்கே சிறந்த ஐபிஎல் அணி: அவர்களிடம் இருந்து எதையும் எளிதாக பெற்றுவிட முடியாது- ரோகித் சர்மா

ஐபிஎல் சாம்பியன் கோப்பையை மூன்று முறை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2020 கிரிக்கெட் டி20 லீக் நாளைமறுநாள் (சனிக்கிழமை, செப்டம்பர் 19-ந்தேதி) தொடங்குகிறது. முதல் போட்டியில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் – மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஐபிஎல் அணிகளில் வெற்றிகரமான அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். நீங்கள் அவர்களிடம் இருந்து எதையும் எளிதாக பெற்றுவிட முடியாது. அனைத்து வகையிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள். நாங்கள் சிறந்த போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த வரும் தொடர் முழுவதும் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடினேன். தற்போதும் அதை தொடர்வேன். அணி தேவைக்கேற்ப அனைத்து வாய்ப்புகளையும் திறந்தே வைப்பேன்.

இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja