விட்டாலிட்டி பிளாஸ்ட் டி20: பாபர் அசாம் சதம் அடித்தார்

விட்டாலிட்டி பிளாஸ்ட் டி20: பாபர் அசாம் சதம் அடித்தார்

விட்டாலிட்டி பிளாஸ்ட் டி20 லீக்கில் பாபர் அசாம் 73 பந்தில் 114 ஓட்டங்கள் விளாச சோமர் செட் எளிதாக வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் விட்டாலிட்டி டி20 லீக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் வீரரான பாபர் அசாம் சோமர்செட் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் சோமர்செட் – கிளாமோர்கன் அணிகள மோதின.

சோமர்செட் அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரராக களம் இறங்கிய பாபர் அசாம். அவர் 73 பந்தில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 114 ரன்னகள் குவித்தார். அணியின் மற்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும் சோமர்செட் அணி ஸ்கோர் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 183 ஓட்டங்கள் குவித்தது.

டி20 கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாமின் சிறந்த ஸ்கோர் இதுவாகும். பின்னர் 184 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கிளாமோர்கன் அணி களம் இறங்கியது. அந்த அணியால் 15.5 சுற்றுகள் தாக்குப்பிடித்து 117 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சோமர்செட் வெற்றி பெற்றது.

9 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 114 ஓட்டங்கள் விளாசிய பாபர் அசாம் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja