ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் – சச்சின் தெண்டுல்கர்

ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் – சச்சின் தெண்டுல்கர்

ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லுமென்று நம்புகிறேன் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

மும்பை:

13வது ஐபிஎல் பருவம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் என்று நம்புகிறேன் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் கூறுகையில், இந்த ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் என்று நம்புகிறேன். போட்டி எங்கு நடந்தாலும் எப்போதும் எனது ஆதரவு மும்பை அணிக்கு உண்டு. மும்பை மற்றும் இந்தியன்ஸ் ஒன்றிணையும் போது அது மும்பை இந்தியன்ஸ் ஆகிறது என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja