தோல்வியில் இருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் திரும்பும்: அனில் கும்ப்ளே

தோல்வியில் இருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் திரும்பும்: அனில் கும்ப்ளே

சூப்பர் சுற்றில் தோல்வியடைந்த நிலையில், உடனடியாக அதில் இருந்து மீண்டு வருவோம் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் கடைசி சுற்றில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது. முதல் மூன்று பந்துகளில் 12 ஓட்டங்கள் அடித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால், கடைசி மூன்று பந்தில் ஒரு ஓட்டத்தை அடிக்க முடியாமல் போனது.

இதனால் போட்டி ‘டை’யில் முடிந்து சூப்பர் சுற்றில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் தோல்வியை தழுவியது. இந்நிலையில் அடுத்த போட்டியில் விசயங்களை சரியாக செய்வோம் என பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘நாங்கள் விளையாடிய விதம் மிகவும் பெருமையாக இருக்கிறது. நாங்கள் வெற்றி பெற்றிருக்கனும், துரதிருஷ்டவசமாக, சூப்பர் ஓவர் வரை சென்றுவிட்டது. சூப்பர் சுற்றில் குறைந்தது 10 முதல் 12 ஓட்டங்கள் தேவை. எங்களால் அதை எடுக்க முடியவில்லை. டெல்லி அணி சிறப்பாக விளையாடியது. நாங்கள் அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டோம். ஆனால், தொடரின் முதல் போட்டி என்பதால் விளையாடிய விதம் திருப்தி அளிக்கும் விதமாக இருந்தது. ஆடுகளத்தில் நாங்கள் செய்ய வேண்டிய சிறு சிறு விசயங்களை சரிசெய்து கொள்வோம்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja