ஆர்சிபி-க்கு எதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

ஆர்சிபி-க்கு எதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் 2020 சீசனின் 3-வது ஆட்டம் இன்று துபாயில் நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி ‘‘அணியில் நாங்கள் சில மாறுதல்களை கொண்டு வந்துள்ளோம். நாங்கள் பேலன்ஸ் மற்றும் ரிலாக்ஸ் அணியாக உணர்கிறோம். இந்த நேரத்தில் அதிக தலைவரக்ளை உருவாக்க ஐடியா வைத்துள்ளோம்’’ என்றார.

ஆர்சிபி அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஆரோன் பிஞ்ச், 2. தேவ்தத் படிக்கல், 3. விராட் கோலி, 4. டி வில்லியர்ஸ், 5. டுபே, 6. வாஷிங்டன் சுந்தர், 7. ஜோஷ் பிலிப்பே, 8. உமேஷ் யாதவ், 9. நவ்தீப் சைனி, 10. டெல் ஸ்டெயின், 11. சாஹல்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. மணிஷ் பாண்டே, 4. விஜய் சங்கர், 5. மிட்செல் மார்ஷ், 6. பிரியம் கார்க், 7. அபிஷேக் சர்மா, 8. ரஷித் கான், 9. புவனேஷ்வர் குமார், 10. சந்தீப் ஷர்மா, 11. டி. நடராஜன்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja