தேவ்தத் படிக்கல் அரைசதம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 11 சுற்றில் 90/1

தேவ்தத் படிக்கல் அரைசதம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 11 சுற்றில் 90/1

இளம் வீரர் தேவ்தத் அரைசதம் அடிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 11 ஓவர் முடிவில் ஒரு மட்டையிலக்கு இழப்பிற்கு 90 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சன்சரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி துபாயில் நடைபெற்ற வருகிறது. சன்சரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரோன் பிஞ்ச் நிதானமாக விளையாட தேவ்தத் படிக்கல் சன்சரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தெறிக்கவிட்டார். இதனால் ஆர்சிபி ஓட்டத்தை விகிதம் சராசரியாக உயர்ந்து கொண்டு வந்தது.

பவர் பளேயில் மட்டையிலக்கு இழபபிற்கு 53 ஓட்டங்கள் சேர்த்தது. 9-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த சுற்றில் பிஞ்ச் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸ் விளாசினார்.

10-வது ஓவரை அபிஷேக் சர்மா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஆர்சிபி அணிக்காத தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்தார். 36 பந்தில் 8 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.

10 ஓவர் முடிவில் ஆர்சிபி மட்டையிலக்கு இழப்பின்றி 86 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 11 ஓவரை விஜய் சங்கர் வீசினார். இந்த சுற்றில் தேவ்தத் 42 பந்தில் 56 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja