பிரிமீயர் லீக் கால்பந்து: கெவின் டி ப்ரூயின், கேப்ரியல் ஜீசஸ் கோல்களால் மான்செஸ்டர் சிட்டி வெற்றி

பிரிமீயர் லீக் கால்பந்து: கெவின் டி ப்ரூயின், கேப்ரியல் ஜீசஸ் கோல்களால் மான்செஸ்டர் சிட்டி வெற்றி

இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்தில் மான்செஸ்டர் சிட்டி வால்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் அணியை 3-1 என வீழ்த்தியது.

இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்தில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் சிட்டி – வால்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. கெவின் டி ப்ரூயின் அதை பயன்படுத்தி கோலாக மாற்றினார். 32-வது நிமிடத்தில் பில் ஃபோடன் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் 2-0  என மான்செஸ்டர் சிட்டி முன்னிலைப் பெற்றது.

2-வது பாதி நேர ஆட்டத்தின்போது 78-வது நிமிடத்தில் வால்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் அணியின் ஜிமெனஸ் கோல் அடித்தார். மான்செஸ்டர் அணியின் கேப்ரியல் ஜீசஸ் இன்ஜூரி நேரத்தில் (90+5) ஒரு கோல் அடிக்க மான்செஸ்டர் சிட்டி 3-1 என வெற்றி பெற்றது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja