சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை இத்தனை கோடியா?

சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை இத்தனை கோடியா?

ஐபிஎல் தொடக்க போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தை 20 கோடி மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

ஐபிஎல் 2020 பருவம் கிரிக்கெட் திருவிழா கடந்த சனிக்கிழமை தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்  – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ரசிகர்களுக்கு போட்டியை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வீட்டில் இருந்துதான் போட்டியை காண வேண்டும். தற்போது கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று காலம் என்பதால் பெரும்பாலானோர் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர்.

அவர்களுக்கு தொலைக்காட்சிதான் சிறந்த பொழுதுபோக்காக விளங்குகிறது. எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு ரசிர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும்.

இந்நிலையில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் போட்டியை 20 கோடி மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். இதற்கு முன் இந்தியாவின் ஒரு விளையாட்டு போட்டியை இதுபோன்ற அதிகமானோர் பார்த்து ரசித்தது கிடையாது. அதேபோல் உலகளவில் நடைபெறும் லீக் போட்டிகளிலும்  சாதனைப்படைத்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja