ஐ.பி.எல். முதல் நாள் ஆட்டத்தை 20 கோடி பேர் பார்த்தனர் – இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்

ஐ.பி.எல். முதல் நாள் ஆட்டத்தை 20 கோடி பேர் பார்த்தனர் – இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்

ஐ.பி.எல். முதல் நாள் ஆட்டத்தை டி.வி. மற்றும் இணையதளம் வாயிலாக மொத்தம் 20 கோடி பேர் கண்டுகளித்து இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்

துபாய்:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த 19-ந்தேதி நடந்த பரபரப்பான தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி சுற்றில் மும்பை இந்தியன்சை 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த ஆட்டத்தை டி.வி. மற்றும் இணையதளம் வாயிலாக மொத்தம் 20 கோடி பேர் கண்டுகளித்து இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வுபடி இந்த எண்ணிக்கை தெரிய வந்திருப்பதாகவும், உலகின் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு லீக் போட்டியையும் முதல் நாளில் இத்தனை பேர் பார்த்ததில்லை என்றும், அந்த வகையில் இது புதிய உலக சாதனை என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja