7-வது வரிசையில் ஆடியது ஏன்? எம்எஸ் டோனி விளக்கம்

7-வது வரிசையில் ஆடியது ஏன்? எம்எஸ் டோனி விளக்கம்

14 நாட்கள் தனிமைப்படுத்துதல், நீண்ட நாட்கள் மட்டையாட்டம் செய்யாமல் இருந்ததன் காரணமாக 7-வது வரிசையில் களம் இறங்கியதாக எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 ஓட்டத்தை வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் தோற்றது.

சார்ஜாவில் நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்புக்கு 216 ஓட்டத்தை குவித்தது. சஞ்சு சாம்சன் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. அவர் 32  பந்தில் 74 ரன்னும் (1 பவுண்டரி, 9 சிக்சர்) கேப்டன் ஸ்டிவ் சுமித் 47 பந்தில் 69 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), ஜாஃப்ரா ஆர்ச்சர் 8 பந்தில்  27 ரன்னும் (4 சிக்சர்) எடுத்தனர். சாம் கர்ரன் 3 மட்டையிலக்குடும், தீபக் சாஹர், நிகிடி, பியூஷ் சாவ்லா தலா 1 மட்டையிலக்குடும் கைப் பற்றினார்கள்.

பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20  ஓவர்களில் 6 மட்டையிலக்கு இழப்புக்கு 200 ஓட்டத்தை எடுத்தது. இதனால் சி.எஸ்.கே. அணி 16 ஓட்டத்தை வித்தியாசத்தில்  தோற்றது. டுபெலிசிஸ் 37 பந்தில் 72 ரன்னும் (1 பவுண்டரி 7 சிக்சர்), வாட்சன் 21 பந்தில் 33 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் டோனி 17 பந்தில் 29 ரன்னும் (3 சிக்சர்) எடுத்தனர். ராகுல் திவேட்டியா 3 மட்டையிலக்குடும், ஆர்ச்சர், ஷ்ரேயாஸ் கோபால், டாம் கர்ரன்  தலா 1 மட்டையிலக்குடும் வீழ்த்தினார்கள்.

சென்னை அணி முதல் தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஜ் வீழ்த்தி இருந்தது. இந்த தோல்வி குறித்து சி.எஸ்.கே. கேப்டன்  டோனி கூறியதாவது:-

217 ஓட்டத்தை என்ற கடினமான இலக்கு இருக்கும்போது தொடக்கம் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அந்த ஓட்டத்தை இலக்கை எட்டமுடியும். எங்களது தொடக்கம் சிறப்பாக அமையாததால் இந்த கடினமான ஓட்டத்தை இலக்கை எட்ட முடியவில்லை.

நான் நீண்ட காலமாக மட்டையாட்டம் செய்யவில்லை. அதோடு 14 நாட்கள தனிமைப்படுத்துதல் உதவவில்லை. இதன் காரணமாகவே நான் 7-வது வரிசையில் களம் இறங்கினேன். சாம் கர்ரனுக்கு வாய்ப்புகளை வழங்க வெவ்வேறு விசயங்களை முயற்சிக்க விரும்பினோம். டு பிளிஸ்சிஸ் தனது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினார்.

ராஜஸ்தான் அணியில் சாம்சனும், ஸ்டீவ் சுமித்தும் சிறப்பாக ஆடினார்கள். அதோடு அவர்களது பந்து வீச்சும் நன்றாக இருந்தது. தவறு செய்யாமல் நேர்த்தியாக வீசினார்கள். எங்களது பந்து வீச்சாளர்கள் பல்வேறு பிழைகளை செய்தனர். நோபாலை கட்டுப்படுத்தவில்லை. ராஜஸ்தான் அணியை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். அதை செய்ய தவறிவிட்டோம்.

இவ்வாறு டோனி கூறி உள்ளார்.

வெற்றி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித் கூறியதாவது:-

கடைசி சுற்றில் ஆர்ச்சரின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் மிகவும் பிரமாதமாக இருந்தது. சஞ்சு சாம்சன் அபாரமாக ஆடி சிக்சர்களை விளாசினார். அவரது ஆட்டமும் அற்புதமாக இருந்தது. எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் நேர்த்தியாக பந்து வீசினார்கள்.

இவ்வாறு சுமித் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja