2-வது வெற்றி யாருக்கு: சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் நாளை பலப்பரீட்சை

2-வது வெற்றி யாருக்கு: சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் நாளை பலப்பரீட்சை

நாளைய போட்டியில், ரபடா vs டு பிளிஸ்சிஸ், பண்ட் vs சென்னை சுழற்பந்து என்ற கணக்கில் போட்டி இருக்கும் என விமர்சகர்கள் கருகின்றனர்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி அணிகள் நேருக்கு நேர் மோதிய ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இதுவரை இரு அணிகளும் 21 முறை மோதியுள்ளன. இதில் 15 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி வாகை சூடியுள்ளது.

கடந்த பருவத்தில் இரண்டு லீக், குவாலிபையர்-2 என மூன்று முறை டெல்லியை நசுக்கியது. இந்த சாதனையுடன் சென்னை அணிக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுக்கும் நேரத்தில், தொடர் தோல்விக்கு இந்த முறை சென்னையை பழிவாங்க துடிக்கும் டெல்லி.

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. ஆனால் 2-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சிடம் தோல்வியை சந்திக்க நேரிட்டது. முதல் ஆட்டத்தில் 48 பந்தில் 71 ஓட்டங்கள் விளாசி அணிக்கு வெற்றித் தேடிக்கொடுத்த அம்பதி ராயுடு லேசாக காயத்தால் அவதிப்படுகிறார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அவர்கள் களம் இறங்கவில்லை. அவர் இல்லாததால் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது நாம் பார்த்தோம்.

இந்த போட்டியிலும் அவர் இல்லாதது சென்னை அணிக்கு மிகப்பெரிய இழப்பே, முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 44 பந்தில் 58 ரன்களும், 2-வது போட்டியில் 37 பந்தில் 72 ரன்களும் அடித்து டு பிளிஸ்சிஸ் நல்ல ஃபார்மில் உள்ளார். ஆனால் டு பிளிஸ்சிஸ் முதல் பந்தில் இருந்து அதிரடி ஆட்டத்தில் களம் இறங்கமாட்டார். ஆனால் அணியை கடைசி வரை வழி நடத்திச் செல்லும் திறமை பெற்றவர். ஒரு ஹிட்டர் உதவியாக இருந்தால் அணியை வெற்றி பெற வைத்து விடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தொடக்க பேட்ஸ்மேன்களான முரளி விஜய் (1, 21), ஷேன் வாட்சன் (4, 33) ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்து வருகின்றனர். வாட்சன் ஒருமுறை ஃபார்முக்கு வந்து விட்டால் சென்னை யானை பலம் பெற்றுவிடும். அதுவரை மற்ற வீரர்களின் சப்போர்ட் அவருக்குத் தேவை. முரளி விஜய்க்கு கூடுதலான இன்னொரு முறை வாய்ப்பு கொடுக்கப்படலாம்.

ருத்துராஜ் கெய்க்வாட் வந்தார், முதல் பந்திலேயே சென்றார். சின்ன தல இடத்தில் தல டோனி களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீண்ட நாள் விளையாடாமல் இருப்பது, 14 நாட்கள் தனிமைதான் பின்வரிசையில் களம் இறங்க காரணம் எனக் கூறியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கடைசி சுற்றில் மூன்று இமாலய சிக்ஸ் விளாசினார். இது அவருக்கு 4-வது இடத்தில் களம் இறங்க உத்வேகம் கொடுத்திருந்தால் சென்னை அணிக்கு கூடுதல் பலம். சாம் கர்ரன் அவரது பங்குக்கு அதிரடியாக விளையாடி முடிந்த அளவிற்கு ஓட்டங்கள் சேர்க்கிறார்.

பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் தீபக் சாஹரின் ஸ்விங் பந்து வீச்சு இன்னும் சரியாக வெளிப்படவில்லை. இவரின் ஸ்விங், டெத் ஓவர் சிறப்பு சென்னை அணியின் பந்து வீச்சுக்கு பலம். அது மிஸ் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய தீபக் சாஹரின் கையில் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக ஒரே சுற்றில் சஞ்சு சாம்சன், விஜய் சங்கரை வீழ்த்தி திருப்பு முனை ஏற்படுத்திய லுங்கி நிகிடி கடைசி சுற்றில் தொடர்ச்சியாக நான்கு சிக்சர் கொடுத்தது அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சீர்குலைத்துவிட்டது. அவர் இன்னும் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும்.

சுழற்பந்து வீச்சில் ஜடேஜா, பியூஷ் சாவ்லா இருவர் மட்டுமே. துபாய் மைதானம் மிகப்பெரியது என்பதால் அதிக  அளவு சிக்சர் கொடுக்க வாய்ப்பில்லை. சரியாக பயன்படுத்திக் கொண்டால் எதிரணியை கட்டுப்படுத்தலாம்.

ஒட்டுமொத்தமாக வாட்சன், டோனி மட்டையாட்டம்கை பொறுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றித் தோல்வியை கணிக்க முடியும்.

டெல்லி அணி இந்த முறை தோல்வியை சந்திக்காமல் கோப்பையை வெல்லும் என்ற தீர்மானத்துடன் களம் இறங்கியுள்ளது. முதல் போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று வெற்றி பெற்றனர். அந்த அணியில் பிரித்வி ஷா, தவான், ஹெட்மையர் என முதல் மூன்று வரிசையில் பலமான வீரர்களை வைத்துள்ளது. ஒருவருக்கு ஆட்டம் பிடித்தால் போதும். பந்து வீசுவது கடினமாகிவிடும். பஞ்சாப் அணிக்கெதிராக இந்த மூன்று பேரும் சொதப்பினர். சென்னைக்கு எதிராக விஸ்வரூபம் எடுக்க விரும்புவார்கள்.

மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் அய்யர் 39 ரன்களும், பண்ட் 31 ரன்களும் சேர்த்தனர். ஆனால் ஆல்-ரவுண்டர் ஸ்டாய்னிஸ் அபாரமாக விளையாடி அணியை மீட்டெடுத்தார். அவர் 21 பந்தில் 53 ஓட்டங்கள் விளாசினார். இதனால் அந்த அணி மகிழ்ச்சியில் உள்ளது.

பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் நோர்ட்ஜ், ரபடா, ஸ்டாய்னிஸ், இசாந்த் சர்மா, மோகித் சர்மா என அனுபவ வீரர்களை வைத்துள்ளது. காயம் காரணமாக இசாந்த் விளையாடமாட்டார். இது அந்த அணிக்கு சற்று பின்னடைவுதான். மோகித் சர்மா முதல் போட்டியில் 45 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். இவர் பந்தவீச்சை சரி செய்து கொண்டால் 12 ஓவர்களை சமாளிப்பது சென்னைக்கு சவாலான விசயம்.

சுழற்பந்து வீச்சில் அஸ்வின், அக்சார் பட்டேல் உள்ளனர். அஸ்வின் முதல் ஓவரிலேயே 2 மட்டையிலக்கு வீழத்தினார். ஆனால் காயம் காரணமாக வெளியேறிவிட்டார். தற்போது உடற்தகுதி பெற்று சென்னைக்கு எதிராக தயாராவிட்டார்.

பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் அந்த அணிக்கு கவலை இல்லை ஐந்து பேரில் ஒருவர் சொதப்பினாலும், ஸ்டாய்னிஸ் 6-வது பவுலராக கைக்கொடுக்க உள்ளார். தொடக்கத்திலும், டெத் ஓவரிலும் ரபடா மிகப்பெரிய பலமாக இருப்பார். சென்னை அணிக்கு ரபடா மிகப்பெரிய அச்சுறுத்தலா இருப்பார்.

மொத்தத்தில் டெல்லி அணியின் பந்து வீச்சை சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படி எதிர்கொள்கிறது என்பதை பொறுத்துதான் சென்னையில் வெற்றி தீர்மானிக்கப்படும்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja