ஆறு போட்டிகளில் ஆறு அணிகள் வெற்றி: ஐபிஎல்-லில் சுவாரஸ்யமான விசயம்

ஆறு போட்டிகளில் ஆறு அணிகள் வெற்றி: ஐபிஎல்-லில் சுவாரஸ்யமான விசயம்

ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ஆறு போட்டிகளில் வெவ்வேறான அணிகளே வெற்றி வாகை சூடியுள்ளன.

ஐபிஎல் 2020 பருவம் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 19-ந்தேதி) தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சென்னை வெற்றி பெற்றது.

2-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

3-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது

4-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

5-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற 6-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

இதில் சென்னை, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்த நான்கு அணிகளும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. 2-வது வெற்றியை ருசிக்க முடியவில்லை.

ஆகவே, ஆறு போட்டிகள் முடிவில் ஆறு அணிகள் வெற்றி பெற்றது ஆச்சர்யமான விசயமாக கருதப்படுகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் சென்னை, மும்பை, கொல்கத்தா அணிகளுக்கு சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.  ஆனால் ஆறு அணிகள் வெற்றி பெற்றுள்ளதால் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja