ஆர்சிபி கேட்ச் மிஸ் செய்யும்: விராட் கோலியுடன் நகைச்சுவையாக உரையாடிய கேஎல் ராகுல்

ஆர்சிபி கேட்ச் மிஸ் செய்யும்: விராட் கோலியுடன் நகைச்சுவையாக உரையாடிய கேஎல் ராகுல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான ஆட்டத்தில் சதம் அடித்த கேஎல் ராகுல், அந்த அணி கேட்ச் மிஸ் செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இன்று 2-வது முறையாக ஆர்சிபி – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏராளமான கேட்ச்களை தவறவிட்டது. விராட் கோலியே இரண்டு கேட்ச்கள் விட்டார். இதனால் கேஎல் ராகுல் சதம் அடிக்க, பஞ்சாப் அணி 206 ஓட்டங்கள் குவித்து 97 ஓட்டத்தில் வெற்றி பெற்றது.

இன்று 2-வது முறையாக மோதும் நிலையில் இன்ஸ்டாகிராமில் நிகழ்வில் இருவரும் உரையாடினர்.

நாங்கள் ஒரேயொரு போட்டியில்தான் வெற்றி பெற்றுள்ளோம். அதுவும் ஆர்சிபி-க்கு எதிராகத்தான். இது சற்று கூடுதல் நம்பிக்கையை எங்களுக்கு அளிக்கும். நான் எப்போதுமே ஆர்சிபிக்கு எதிராக ரசித்து மட்டையாட்டம் செய்வேன். மீண்டும் ஒரு வாணவேடிக்கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என கேஎல் ராகுல் விராட் கோலியிடம் தெரிவித்தார்.

விராட் கோலி: போட்டிக்கு நீங்கள் எவ்வாறு தயார்படுத்துள்ளீர்கள்?

கேஎல் ராகுல்: நான் சொன்னதுபோல், ஒவ்வொரு போட்டியும் தற்போது எங்களுக்கு முக்கியமானதுதான்.

விராட் கோலி: வழக்கமான பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கூறுவதுபோல் எனக்கு பதில் அளிக்கக்கூடாது.

கேஎல் ராகுல்: அப்படியெல்லாம் இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் எங்கள் அணி வெற்றிபெற வேண்டியது அவசியம்.

விராட் கோலி: நாங்கள் தொடரின் தொடக்கத்தில் மோசமான தோல்வியை சந்தித்தோம். அது உங்களுக்குத் தெரியும்.

கேஎல் ராகுல்: எனக்குத் தெரியும். உங்களுடைய வீரர்கள் சில கேட்ச்களை விடுவார்கள் என்று நம்பி கொண்டிருக்கிறேன். 

கோலி: கடந்த சீனில் நானும் இதுபோன்ற நிலையில்தான் சென்று கொண்டிருந்தேன். பந்தை தூக்கி அடிப்பதற்கு முன் இருமுறை யோசிக்க வேண்டும் (கேட்ச் விட்டதை மனதில் வைத்து).

கேஎல் ராகுல்: எனக்குத் தெரியும். ஒருபோதும் இனிமேல் அப்படி நடக்காது.

கோலி: இது சூப்பர் ஆட்டமாக இருக்கப்போகிறது. நீங்கள் சிறந்த அணி. எங்களுடைய அணியில் சிறப்பாக விளையாடி  வருகிறது. ஷார்ஜா மிகவும் பொழுபோக்காக இருக்கப் போகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja