ராகுல், கெயில் அதிரடி – பெங்களூரை 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்

ராகுல், கெயில் அதிரடி – பெங்களூரை 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்

கிறிஸ் கெயில், ராகுல் அதிரடி ஆட்டத்தால் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி பெற்றது.

ஷார்ஜா:

ஷார்ஜாவில் ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது.

பஞ்சாப் அணிக்கெதிராக டாஸ் வென்ற ஆர்சிபி மட்டையாட்டம் தேர்வு செய்தது.

அதன்படி தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடியை தொடங்க ஆரம்பித்தனர்.

தேவ்தத் 12 பந்தில் 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பவர் பிளேயில் ஆர்சிபி 1 விக்கட் இழப்பிற்கு 57 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

பிஞ்ச் 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 13 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். ஷிவம் டுபே 23 ஓட்டத்தில் வெளியேறினார். அடுத்து வந்த டி வில்லியர்ஸ் 2 ஓட்டத்தில் ஏமாற்றம் அளித்தார். விராட் கோலி அதே சுற்றில் 48 ஓட்டத்தில் வெறியேறினார்.

ஆர்சிபி 18 ஓவர் முடிவில் 137 ரன்களே எடுத்திருந்தது, 19-வது சுற்றில் 10 ரன்களும், கடைசி சுற்றில் 24 ரன்களும் என 12 பந்தில் 34 ஓட்டங்கள் அடிக்க ஆர்சிபி 20 சுற்றில் 171 ஓட்டங்கள் அடித்துள்ளது. கிறிஸ் மோரிஸ் 8 பந்தில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 25 ஓட்டங்கள் விளாசினார்.

இதையடுத்து 172 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது.

கே எல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இந்த ஜோடி முதல் மட்டையிலக்குடுக்கு 78 ஓட்டங்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 45 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து ராகுலுடன் கிறிஸ் கெயில் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி அரை சதமடித்தனர்.

இறுதி கட்டத்தில் 53 ஓட்டத்தை எடுத்த நிலையில் கெயில் அவுட்டானார்.

முடிவில், ஆட்டத்தின் கடைசி பந்தில் பஞ்சாப் அணி வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராகுல் 61 ஓட்டத்தை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja