வெற்றி வாகை சூடப்போவது யார்?: நாளை சிஎஸ்கே – டெல்லி பலப்பரீட்சை

வெற்றி வாகை சூடப்போவது யார்?: நாளை சிஎஸ்கே – டெல்லி பலப்பரீட்சை

சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்ல்ஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் தோல்விக்கு சிஎஸ்கே பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

ஐபிஎல் 34-வது லீக் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 2-வது முறையாக எதிர்கொள்கிறது.

துபாயில் ஏற்கனவே நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 44 ஓட்டத்தில் தோல்வியடைந்தாலும், கடைசியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றி சிஎஸ்கே-வுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.

7-வது போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்த பிறகு ஐதராபாத் அணிக்கெதிராக பல்வேறு மாற்றங்களை அதிரடியாக மேற்கொண்டார் எம்எஸ் டோனி.

பந்து வீச்சு, மட்டையாட்டம்கில் அதிரடி காட்டும் சுட்டிப்பையன் சாம் கர்ரனை தொடக்க வீரராக களம் இறக்கி, வாட்சனை 3-வது வரிசைக்கு இறக்கினார். டு பிளிஸ்சிஸ் (0) கைக்கொடுக்காவிடிலும் சாம் கர்ரன் 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 31 ஓட்டங்கள் எடுத்து பவர் பிளேயில் 44 ஓட்டங்கள் வர முக்கிய காரணமாக இருந்தார்.

அதன்பின் மிடில் ஆர்டரில் வாட்சன் (42), அம்பதி ராயுடு (41) ஜோடி நிதானமாக 15 ஓவர் வரை போட்டியை கொண்டு சென்று 116 ஓட்டங்கள் அடிக்க, இறுதியில் ஜடேஜா (10 பந்தில் 25 ரன்), டோனி (13 பந்தில் 21) ஓட்டங்கள் அடித்து கட்டுப்படுத்தக் கூடிய ஸ்கோரை எட்டியது.

தைரியமாக ஒரு பேட்ஸ்மேனை நீக்கிவிட்டு ஏழு பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது சிஎஸ்கே-வுக்கு கைக்கொடுத்தது.

டோனி பந்து வீச்சாளர்களுக்கான வியூகத்தை சிறப்பாக அமைத்தார். தீபக் சாஹர் பவர்பிளேயில் சற்று கூடுதல் ஓட்டத்தை கொடுக்க தொடர்ந்து நான்கு ஓவர்களை கொடுத்து முடித்தார்.

சுட்டிப்பையன் பவர் பிளேயில் 3 ஓவர் வீசி வார்னரை அவுட்டாக்கி அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தார். கடந்த சில போட்டிகளில் கர்ரன் டெத் சுற்றில் ஓட்டங்கள் வாரிக்கொடுத்ததால் 3 ஓவருடன் அவரை நிறுத்திக் கொண்டார் டோனி. ஷர்துல் தாகூரை இரண்டு ஓவருக்கும், பிராவோவை 3 ஓவருக்கும் சூப்பராக பயன்படுத்தினார். இருவரும் 3 மட்டையிலக்கு பெற்றுக் கொடுத்தனர். பிராவோ கொஞ்சம் கொஞ்சமாக பழைய பாஃர்முக்கு திரும்பி, டெத் சுற்றில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளார். முக்கியமான கட்டத்தில் அணிக்கு இது பலமாக இருக்கிறது.

இதே திட்டத்துடன்தான் டெல்லிக்கு எதிராகவும் களம் இறங்கலாம். ஆனால் ஷார்ஜா மைதானம் தொடக்கத்தில் மட்டையாட்டம்கின் சொர்க்கபூமியாக இருந்தது. ஆனால் கடந்த ஐந்து ஐந்து போட்டிகளில் ஆர்சிபி – பஞ்சாப் போட்டியைத் தவிர மற்ற நான்கு போட்டிகளில் முதலில் மட்டையாட்டம் செய்த அணியை வெற்றி பெற்றுள்ளது.

அதுவும் முதலில் மட்டையாட்டம் செய்த அணி அதிக ரன்னும், சேஸிங் செய்த அணி படுதோல்வியும் அடைந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். டாஸ் வென்று 180 ரன்களுக்கு மேல் ஓட்டங்கள் அடித்தால் சென்னை அணி வெற்றியை எதிர்பார்க்கலாம். 4-வது வெற்றியை பெற்றே தீர வேண்டும் என்ற குறிக்கோள் உடன் சிஎஸ்கே களம் இறங்கும்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 போட்டிகளில் 6-ல் வெற்றி வாகை சூடியுள்ளது.

தவான் முதல் ஆறு பந்துவீச்சு சுற்றில் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் கடந்த இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து அரைசதம் அடித்து பார்முக்கு வந்துள்ளார். ரிஷப் பண்ட், ஹெட்மையர் இல்லாத நேரத்தில் தவான் பார்ம் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம்.

ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யர், ரகானே, மார்கஸ் ஸ்டாய்னிஸ் மட்டையாட்டம்கில் உள்ளனர். ரகானே இரண்டு போட்டிகளில் ஜொலிக்கவில்லை. எப்படியும் 160 ரன்களை தாண்டும் திறனையை பெற்றுள்ளது. ஷ்ரேயாஸ் அய்யருக்கு கடந்த போட்டியில் காயம் ஏற்பட்டது, ஒருவேளை களம் இறங்காவிடில் அது டெல்லிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அந்த அணியின் முதுகெலும்பே பந்து வீச்சுதான். ரபடா, அன்ரிச் நோர்ட்ஜே ஜோடி அபாரமாக பந்து வீசுகிறது. அது பவர்பிளே ஆக இருந்தாலும் சரி, டெத் ஓவர்களாக இருந்தாலு சரி. ரபடா எல்லா போட்டிகளிலும் மட்டையிலக்கு வீழ்த்தியுள்ளார். இருவரும் ஓட்டத்தை கொடுத்து விட்டால் டெல்லி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இவர்களுக்கு துணையாக கடந்த போட்டியில் அறிமுகம் வீரர் துஷார் தேஷ்பாண்டே நல்ல முறையில் பந்து வீசினார்.

சுழற்பந்து வீச்சில் அஸ்வின் அந்த அணிக்கு அசுர பலம். அக்சார் பட்டேல் ஆதரவாக இருக்கிறார். ஐந்து பந்து வீச்சாளர்கள் என்றாலும் ஸ்டாய்னிஸ் அவசரத்திற்கு உள்ளார். ஒட்டுமொத்தத்தில் பந்துவீச்சுகை இலக்கு செய்யும் அணிக்கு வெற்றி நிச்சயம்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja