ஐபிஎல் கிரிக்கெட்: ஜடேஜா, ராயுடு அதிரடி – சென்னை சூப்பர் கிங்ஸ் 179 ஓட்டங்கள் குவிப்பு

ஐபிஎல் கிரிக்கெட்: ஜடேஜா, ராயுடு அதிரடி – சென்னை சூப்பர் கிங்ஸ் 179 ஓட்டங்கள் குவிப்பு

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லிக்கு எதிரான போட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 மட்டையிலக்கு இழப்புக்கு 179 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

சார்ஜா:

ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி மட்டையாட்டம்கை தேர்வு செய்தது.

இதையடுத்து, சாம் கர்ரன் மற்றும் டு பிளசிஸ் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 3 பந்துகளை மட்டுமே சந்தித்த சாம் கர்ரன் ஓட்டத்தை எதுவும் எடுக்காமல் துஷார் தேஷ்பாண்டே பந்து வீச்சில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். 

அடுத்துவந்த ஷேன் வாட்சன், டு பிளசிஸ் உடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 28 பந்துகளை சந்தித்த வாட்சன் 6 பவுண்டரிகள் உள்பட 36 ஓட்டங்கள் குவித்து அன்சிஷ் நார்ட்ஜீ பந்து வீச்சில் வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய அம்பதி ராயுடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் 47 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 58 ஓட்டங்கள் குவித்திருந்த டு பிளசிஸ், ரபாடா பந்து வீச்சில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் டோனி 5 பந்தில் 3 ஓட்டத்தை எடுத்திருந்த நிலையில் நார்ட்ஜீ அவுட் ஆனார். அடுத்துவந்த ஜடேஜா, ராயுடு உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஓட்டத்தை குவிப்பில் ஈடுபட்டார்.

சிறப்பாக ஆடிய ராயுடு 25 பந்தில் 4 சிக்சர்கள் 1 பவுண்டரி உள்பட 45 ரன்னுடனும், அதிரடியாக ஆடிய ஜடேஜா 13 பந்தில் 4 சிக்சர்கள் உள்பட 33 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இதனால் 20 ஓவர் முடிவில் 4 மட்டையிலக்குடுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 179 ஓட்டங்கள் குவித்தது.

டெல்லி தரப்பில் அதிகபட்சமாக நார்ட்ஜீ 2 மட்டையிலக்குடுகளை வீழ்த்தினார்.  

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja