காயத்தால் பிராவோ சில நாட்கள் ஆட மாட்டார்

காயத்தால் பிராவோ சில நாட்கள் ஆட மாட்டார்

காயம் காரணமாக பிராவோ சில நாட்கள் அல்லது சில வாரங்கள் விளையாட மாட்டார் என்று அணியின் பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்தார்.

சார்ஜா:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் பிராவோவுக்கு நேற்றைய போட்டியின்போது காயம் ஏற்பட்டது. அவரது வலது காலில் இடுப்பும் தொடையும் சேருமிடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் கடைசி சுற்றில் அவரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த காயம் காரணமாக பிராவோ சில நாட்கள் அல்லது சில வாரங்கள் விளையாட மாட்டார் என்று அணியின் பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்தார்.

ஏற்கனவே முழங்காலில் ஏற்பட்ட காயத்தால், பிராவோ முதல் 3 ஆட்டத்தில் விளையாடவில்லை. அவர் மேலும் சில ஆட்டங்களில் விளையாடாமல் போவது அணிக்கு பாதிப்பாக இருக்கும்.

வெளிநாட்டு வீரர்களில் இம்ரான் தாகீர், சான்ட்னெர் ஆகியோருக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இனிவரும் ஆட்டங்களில் பிராவோ இடத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja