பஞ்சாப்புடன் இன்று மோதல்- மும்பை அணியின் ஆதிக்கம் நீடிக்குமா?

பஞ்சாப்புடன் இன்று மோதல்- மும்பை அணியின் ஆதிக்கம் நீடிக்குமா?

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் – லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்று இரவு மோதுகின்றன.

அபுதாபி:

ஐ.பி.எல். போட்டியில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.

மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத்-மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா அணி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி ஐதராபாத்தை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

ஐதராபாத் அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து 4-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது. இரு அணிகளும் மோதிய போட்டியில் கொல்கத்தா 11-ல், ஐதராபாத் 7-ல் வெற்றி பெற்றுள்ளன.

இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் – லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

மும்பை அணி 6 வெற்றி 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 7-வது வெற்றியை பெற்று ஆதிக்கத்தை நீட்டித்து கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது.

பஞ்சாப் 2 வெற்றி, 6 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. மும்பை அணி கடைசியாக விளையாடிய 5 போட்டியில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஆதிக்கத்தை பஞ்சாப் அணி தடுத்து நிறுத்துமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் மோதிய போட்டியில் மும்பை 14-ல், பஞ்சாப் 11-ல் வெற்றி பெற்றுள்ளன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja