25 பந்துக்குள் அதிக முறை அரைசதம்: டேவிட் வார்னர் சாதனையை சமன் செய்தார் டி வில்லியர்ஸ்

25 பந்துக்குள் அதிக முறை அரைசதம்: டேவிட் வார்னர் சாதனையை சமன் செய்தார் டி வில்லியர்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 22 பந்தில் 55 ஓட்டங்கள் அடித்ததன் மூலம் டேவிட் வார்னரின் சாதனையை டி வில்லியர்ஸ் சமன் செய்துள்ளார்.

துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. முதலில் மட்டையாட்டம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 177 ஓட்டங்கள் அடித்தது. பின்னர் 178 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களம் இறங்கியது.

விராட் கோலி ஆட்டமிழக்கும்போது ஆர்சிபி அணிக்கு 41 பந்தில் 71 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஏபி டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 22 பந்தில் அரைசதம் அடித்ததோடு அணியை வெற்றி பெற செய்தார். 22 பந்தில் 6 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 55 ஓட்டங்கள் விளாச ஆர்சிபி 2 பந்துகள் மீதமுள்ள நிலையில், 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் வரலாற்றில் 25 பந்திற்குள் டி வில்லியர்சின் 12-வது அரைசதம் இதுவாகும். இதற்கு முன் டேவிட் வார்னர் 12 முறை இதுபோன்று 25 பந்திற்குள் அரைசதம் அடித்துள்ளார். தற்போது டிவில்லயர்ஸ் அதை சமன் செய்துள்ளார்.

கிறிஸ் கெய்ல், பொல்லார்ட் 7 முறை அடித்து 2-வது இடத்திலும், சேவாக் 6 முறை அடித்து 3-வது இடத்திலும் உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja