சுனில் நரைன் பந்து வீச ஆக்சன் குழு அனுமதி: சந்தோசத்தில் கொல்கத்தா

சுனில் நரைன் பந்து வீச ஆக்சன் குழு அனுமதி: சந்தோசத்தில் கொல்கத்தா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் பந்து வீச்சில் பிரச்சனை இல்லை என ஐபிஎல் பந்துவீச்சு ஆக்சன் குழுல் தெரிவித்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் சுனில் நரைன். இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக பந்து வீசும்போது, அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்தனர்.

புகார் அளிக்கப்பட்டாலும் தொடர்ந்து பந்து வீசலாம், ஆனால் இன்னொரு முறை புகார் அளிக்கப்பட்டால் தொடர் முழுவதும் பந்து வீச இயலாது தெரிவிக்கப்பட்டது.

இதனால் கொல்கத்தா அணி அற்குப்பின் அவரை களம் இறக்காமல், சுனில் நரைன் பந்து வீச்சை ஆய்வு செய்ய வேண்டுகோள் விடுத்தது.

அதன்படி அவது பந்து வீச்சை ஐபிஎல் குழு ஆய்வு செய்தது, அப்போது முழங்கை ஐபிஎல் விதிமுறையை தாண்டி அதிக டிகிரியாக வளையவில்லை என்று தெரிவித்தது. இதனால் சுனில் நரைன் தொடர்ந்து பந்து வீச அனுமதிக்கப்பட்டுள்ளார்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja