அதிவிரைவாக 50 மட்டையிலக்கு: நரைன், லிசித் மலிங்காவை முந்தினார் ரபடா

அதிவிரைவாக 50 மட்டையிலக்கு: நரைன், லிசித் மலிங்காவை முந்தினார் ரபடா

டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபடா, ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 மட்டையிலக்கு வீழ்த்திய நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டையாட்டம் செய்யும்போது ரபடா சென்னை அணியின் டு பிளிஸ்சிஸ் மட்டையிலக்குடை வீழ்த்தினார்.

இந்த மட்டையிலக்கு மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் ரபடா 50-வது மட்டையிலக்குடை பதிவு செய்தார். 50 மட்டையிலக்குடை வீழ்த்த ரபடாவிற்கு 27 போட்டிகளே தேவைப்பட்டது. இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் அதிகவமாக, அதாவது குறைந்த போட்டிகளில் 50 மட்டையிலக்கு வீழ்த்திய வீர்ர என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் சுனில் நரைன் 32 போட்டிகளிலும, லசித் மலிங்கா 33 போட்டிகளிலும், இம்ரான் தாஹிர் 35 போட்டிகளிலும் 50 மட்டையிலக்கு வீழ்த்தியுள்ளனர்.

ரபடா தொடர்ந்து 23 போட்டிகளில் இடைவெளி இல்லாமல் மட்டையிலக்குடுகளை கைப்பற்றி வருகிறார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja