சூப்பர் ஓவரும், கொல்கத்தா அணியும்: சுவாரஸ்ய தகவல்

சூப்பர் ஓவரும், கொல்கத்தா அணியும்: சுவாரஸ்ய தகவல்

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 4-வது முறையாக சூப்பர் ஓவரை சந்தித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதன்முறையாக வெற்றியை ருசித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சாதனைகளும், சில சுவாரஸ்யமாக நிகழ்வுகளும் நடப்பதுண்டு. இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவத்தை பார்ப்போம்.

முதலில் மட்டையாட்டம் செய்த கொல்கத்தா 163 ஓட்டங்கள் அடித்தது. 164 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணியும் 163 ரன்களே அடித்ததால் போட்டி ‘டை’ ஆனது. இந்த பருவத்தில் ஏற்கனவே டெல்லி – பஞ்சாப், ஆர்சிபி – மும்பை இடையிலான ஆட்டம் டையில் முடிந்துள்ளது. இந்த போட்டி 3-வதாகும்.

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே பருவத்தில் மூன்று போட்டிகள் டையில் முடிந்தது இதுவே முதல்முறையாகும். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்றைய போட்டியுடன் 4-வது முறையாக சூப்பர் ஓவரை சந்தித்துள்ளது. இதற்கு முன் 2009-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராகவும், 2014-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராகவும், கடந்த வருடம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராகவும் சூப்பர் சுற்றில் தோல்வியையே சந்தித்துள்ளது. இன்றுதான் வெற்றியை ருசித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja