7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்

7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்

சென்னைக்கு எதிரான போட்டியில் 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

அபுதாபி:

ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் மட்டையாட்டம்கை தேர்வு செய்தார்.

அதன்படி சென்னை அணியின் டுபிளசிஸ் மற்றும் சாம் கர்ரன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 9 பந்துகளை சந்தித்த டு பிளசிஸ் 10 ஓட்டத்தில் வெளியேறினா. அடுத்துவந்த வாட்சன் 3 பந்தில் 8 ஓட்டத்தை எடுத்த நிலையில் வெளியேறினார்.

25 பந்தில் 22 ஓட்டத்தை எடுத்திருந்த சாம் கர்ரன் ஷ்ரேஷ் கோபால் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்த வந்த அம்பதி ராயுடு, கேப்டன் டோனி அணியின் ஸ்கோரை உயர்த்த முற்பட்டனர். 

ஆனால்,  ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சால் சென்னை அணி வீரர்களால் அணியின் ஸ்கோரை உயர்த்தமுடியவில்லை.

19 பந்துகளை சந்தித்த ராயுடு 13 ரன்னிலும், 28 பந்துகளை சந்தித்த கேப்டன் டோனி 22 ரன்னிலும் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். 

இதனால், 20 சுற்றுகள் முடிவில் 5 மட்டையிலக்குடுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 125 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் முதலில் மட்டையாட்டம்கை தேர்வு செய்த அணி எடுத்த மிகக்குறைவான ஸ்கோர் இது ஆகும்.

இதையடுத்து, 126 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது.

முதலில் முக்கிய மட்டையிலக்குடுகளை இழந்த ராஜஸ்தான், அதன்பின் நிதானமாக ஆடியது.

ஜோஸ் பட்லரும், ஸ்மித்தும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில், 17.3 சுற்றில் 3 மட்டையிலக்குடுக்கு 126 ரன்களை எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.  பட்லர் 70 ரன்னும், ஸ்மித் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja