ஐ.பி.எல். கிரிக்கெட் : டெல்லி அணியில் பிரவின் துபே சேர்ப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட் : டெல்லி அணியில் பிரவின் துபே சேர்ப்பு

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த அமித் மிஸ்ராவுக்கு பதிலாக, கர்நாடகாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான பிரவின் துபே சேர்க்கப்பட்டார்.

பிரவின் துபே

துபாய்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த 37 வயது சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா கடந்த 3-ந் தேதி சார்ஜாவில் நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை பிடிக்கையில் கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஐ.பி.எல். போட்டி தொடரில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் அமித் மிஸ்ராவுக்கு பதிலாக டெல்லி அணியில் கர்நாடகாவை சேர்ந்த 27 வயது சுழற்பந்து வீச்சாளரான பிரவின் துபே நேற்று சேர்க்கப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் பிறந்தவரான பிரவின் துபே தற்போது கர்நாடக மாநில அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு நடந்த சையது முஸ்தாக் அலி 20 சுற்றிப் போட்டியில் அவர் 8 ஆட்டங்களில் விளையாடி 6 மட்டையிலக்கு வீழ்த்தினார். கர்நாடக மாநில அணிக்காக 14 இருபது சுற்றிப் போட்டிகளில் ஆடி இருக்கும் அவர் 16 மட்டையிலக்குடுகள் கைப்பற்றி இருக்கிறார். தற்போது அவர் பெங்களூரு அணியின் வலைப்பயிற்சி பவுலராக அமீரகத்தில் இருக்கிறார்.

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja