லங்கா பிரிமீயர் லீக்கில் டு பிளிஸ்சிஸ், அந்த்ரே ரஸல்

லங்கா பிரிமீயர் லீக்கில் டு பிளிஸ்சிஸ், அந்த்ரே ரஸல்

இலங்கை கிரிக்கெட் போர்டு நடத்தும் லங்கா பிரிமீயர் லீக்கில் டு பிளிஸ்சிஸ், ரஸல் ஆகியோரை கொழும்பு கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை போன்று இலங்கையில் லங்கா பிரமீயர் லீக் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனாவால் அறிமுகம் ஆவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் 21-ந்தேதி முதல் டிசம்பர் 13-ந்தேதி வரை ஐந்து அணிகள் மோதும் வகையில் தொடர் தயார் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அணிகளும் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி கணினிமய மூலம் நடைபெற்றது. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர்.

கிறிஸ் கெய்லை கண்டி டஸ்கடர்ஸ் அணியும், கார்லஸ் பிராத்வைட்டை தம்புல்லா ஹாக்ஸ் அணியும், தென்ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லரை தம்புல்லா அணியும், பாகிஸ்தானின் ஷாகித் அப்ரியை காலே கிளாடியோட்டர்ஸ்  அணியும், சோயிப் மாலிக்கை ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணியும் எடுத்துள்ளது.

டு பிளிஸ்சிஸ், அந்த்ரே ரஸல் ஆகியோரை கொழும்பு கிங்ஸ் அணி எடுத்தள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja