வெர்சன் 2.0: முதன்மையான 3 அணிகளுக்கு தண்ணி காட்டிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்

வெர்சன் 2.0: முதன்மையான 3 அணிகளுக்கு தண்ணி காட்டிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2-வது பாதி தொடரில் பாயின்ட் டேபிளில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் அணிகளை வென்று அசத்தியுள்ளது.

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப். ஆனால் அந்த அணிக்கு முதல் பாதி தொடர் சிறப்பாக அமையவில்லை. 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

இதனால் பஞ்சாப் அணி அவ்வளவுதான் என கருதப்பட்டது. இந்நிலையில்தான் 2-வது பாதி தொடரில் கிறிஸ் கெய்ல் உடன் களம் இறங்கியது. அதன்பின் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

8-வது போட்டியில் ஆர்சிபி-யையும், 9-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை இரண்டு முறை சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்ட நிலையிலும், நேற்று டெல்லி அணியையும் வீழ்த்தியுள்ளது. இந்த மூன்று அணிகளும் பாயின்ட் டேபிளில் முதன்மையான 3 வரிசையில் உள்ளது.

ஒரு வெற்றியுடன் கடைசி இடத்தில் இருந்த பஞ்சாப் தற்போது 10 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளளது. இன்னும் 4 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த நான்கிலும் வெற்றி பெற்றால் பிளே ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறிவிடும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja