டாப் ஸ்கோரர் பட்டியலில் மின்னல் வேகத்தில் முன்னேறிய தவான்

டாப் ஸ்கோரர் பட்டியலில் மின்னல் வேகத்தில் முன்னேறிய தவான்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் கடைசி நான்கு போட்டிகளில் சிறப்பாக விளையாட அதிக ஓட்டங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து பஞ்சாப் அணி வெற்றிபெற திணறினாலும் அந்த அணியின் தொடக்க வீரர்களான கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் ஓட்டத்தை குவிப்பில் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.

கேஎல் ராகுல் 10 போட்டிகளில் 1 சதம், ஐந்து அரைசதங்களுடன் 540 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். மயங்க் அகர்வால் 9-வது போட்டி வரை 1 சதம், 2 அரைசதங்களுடன் 393 ஓட்டங்கள் அடித்து 2-வது இடத்தில் இருந்தார். நேற்று ஐந்து ஓட்டங்கள் மட்டுமே அடித்தார்.

ஆனால் டெல்லி அணி தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான் முதல் ஆறு ஆட்டங்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதன்பின் கடைசி நான்கு போட்டிகளில் இரண்டு அரைசதம், இரண்டு சதங்கள் (69, 57, 101, 106) என சிறப்பாக விளையாடி 465 ரன்களுடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டு பிளிஸ்சிஸ் 375 ரன்களுடன் 4-வது இடத்திலும், விராட் கோலி 347 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja