ஷ்ரேயாஸ் அய்யர் நம்பமுடியாத வகையில் கேப்டனாக செயல்படுகிறார்: ரபடா புகழாரம்

ஷ்ரேயாஸ் அய்யர் நம்பமுடியாத வகையில் கேப்டனாக செயல்படுகிறார்: ரபடா புகழாரம்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ஷ்ரேயாஸ் அய்யர் நம்ப முடியாத வகையில் வழிநடத்திச் செல்கிறார் என ரபடா புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7-ல் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெறறி பெற்றால் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 335 ஓட்டங்கள் விளாசியுள்ளார். அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபடா 20 மட்டையிலக்குடுக்கு மேல் வீழ்த்தி பர்பிள் கேப்பை கைப்பற்றி அசத்தி வருகிறார்.

ஷ்ரேயாஸ் அய்யரின் கேப்டன் பதவி குறித்து ரபடா கூறுகையில் ‘‘ஷ்ரேயாஸ் அய்யர் உண்மையிலேயே நம்பமுடியாத வகையில் கேப்டன் பதவியில் செயல்பட்டு வருகிறார். அவர் இளம் வீரர். மிகப்பெரிய நிலையில் வெளிநாட்டு வீரர்களை அவர் வழிநடத்தி செல்வதை பார்க்கும்போது, அந்த பொறுப்பு மிகப்பெரியது. தற்போது வரை அவர் சிறப்பாக கையாண்டு வருகிறா். முன் நின்று அணியை வழிநடத்திச் செல்கிறார்.

அவர் ஒரு சாதாரணமாக நபர். களத்திற்குள் இறங்கிய பின்னர், அவர் எடுக்கும் முடிவுகளுக்கு,  தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உதவியாக இருக்கிறார் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja