ஓட்டம் பிடிப்பது ஏன்?: விவரிக்கிறார் இம்ரான் தாஹிர்

ஓட்டம் பிடிப்பது ஏன்?: விவரிக்கிறார் இம்ரான் தாஹிர்

மட்டையிலக்கு வீழ்த்தியதும் மைதானத்திற்குள் நீண்ட தூரம் ஒடுவது ஏன் என்பதை இம்ரான் தாஹிர் விவரித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் மட்டையிலக்கு வீழ்த்தியதும், அதை கொண்டாடும் விதமாக மைதானத்தின் பவுண்டரி லைனை நோக்கி இரண்டு கைகளையும் விரித்த படி ஓட்டம் எடுப்பார்.

அது தாஹிரின் டிரேட் மார்க் கொண்டாட்டமும் கூட. உள்ளூர் கிரிக்கெட் முதல் சர்வதேச கிரிக்கெட் வரை தாஹிர் இதனை பின்பற்றுவது வழக்கம். அது சமூக வலைத்தளங்களிலும் சமயங்களில் வைரலாவது உண்டு.

இந்நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் அஷ்வின் யூடியூப் ஷோவில் ஏன் மட்டையிலக்கு எடுத்ததும் பல மைல் தூரம் ஓட்டம் எடுக்கிறீர்கள்? அதற்கான காரணம் என்ன? என தாஹிரிடம் கேட்டார்.

‘‘அதை பேஷன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அது எங்கிருந்து வந்தது என எனக்கு தெரியாது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் கிளப் கிரிக்கெட் விளையாடிய போது மட்டையிலக்கு வீழ்த்தியதும் அந்த சந்தோஷத்தில் ஓடினேன்… ஓடினேன்… மைதானத்திற்கு வெளியே இருந்த சாலை வரை ஓடி நின்றேன்.

பின்னர் மீண்டும் பொடி நடையாக மைதானத்திற்குள் வந்தேன். அப்போது அங்கு குழுமியிருந்தவர்கள் என்னை பார்த்து சிரித்தனர். மற்றவர்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும், எனக்கு அப்படி தெரியவில்லை என தாஹிர் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja