சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 155 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 155 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்

ராபின் உத்தப்பா, சஞ்சு சாம்சன் கொடுத்த சிறந்த தொடக்கத்தை சரியாக பயன்படுத்தாததால் ஐதராபாத் அணிக்கு 155 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ததது.

அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ராபின் உத்தப்பா 13 பந்தில் 19 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 26 பந்தில் 36 ஓட்டங்கள் சேர்த்தார்.

சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்கும்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 11.4 சுற்றில் 2 மட்டையிலக்கு இழப்பிற்கு 86 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

பென் ஸ்டோக்ஸ் (32 பந்தில் 30 ரன்), பட்லர் (12 பந்தில் 9 ரன்), ஸ்மித் (15 பந்தில் 19 ரன்) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க ரியான் பராக் 12 பந்தில் 20 ஓட்டங்கள் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 சுற்றில் 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 154 ஓட்டங்கள் அடித்துள்ளது.

இன்று ஐதராபாத் அணியில் சேர்க்கப்பட்ட ஹோல்டர் 4 சுற்றில் 33 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 மட்டையிலக்கு வீழ்த்தினார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja